இதனிடையே முதல்வர் ஸ்டாலின், எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்! கல்வியால் தகுதி வரட்டும். தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும். நாளை நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம் என நேற்று கூறியிருந்தார்.
அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆம், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரி பேரவையில் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.