திராவிட கொள்கையில் தீவிர பற்று கொண்டவர்! – புலமைப்பித்தனுக்கு முதல்வர் அஞ்சலி!

புதன், 8 செப்டம்பர் 2021 (11:37 IST)
உடல்நலக் குறைவால் மறைந்த கவிஞர் புலமைப்பித்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் ஹெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல காலமாக பாடலாசிரியராக இருந்து வந்தவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆரின் பிரபலமான “நீ யார் நான் யார்” பாடல் முதல் தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதியுள்ளார். முன்னாள் அதிமுக ஆட்சியில் அவை கவிஞராகவும் மரியாதை செய்யப்பட்டவர் புலமைப்பித்தன்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலமைப்பித்தன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுக்கொண்டு அரசியலில் தீவிரமாக இயங்கியவர் புலமைப்பித்தன். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அதிமுக தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்