ஊரடங்கின் அடுத்த கட்டம் என்ன? ஸ்டாலின் இன்று ஆலோசனை!

புதன், 8 செப்டம்பர் 2021 (09:44 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 1,544 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,25,778 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். கலைவாணர் அரங்கில் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்