மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.560 உயர்வு..!

Siva

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (09:40 IST)
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 70 ரூபாயும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 560 ரூபாயும் உயர்ந்துள்ளது. இது நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும், ஒரு சவரன் தங்கம் புதிய உச்சமாக 76 ஆயிரம் ரூபாயை நெருங்கிக்கொண்டிருப்பதும் பொதுமக்களுக்குக் கலக்கத்தை அளித்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரித்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்த விவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,400 
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ.   9,470 
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,760
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,254
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,330
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 82,032
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  82,640
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.127.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.127,000.00
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்