திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணைச் செயலாளர் குமார் துரைச்சாமி இது குறித்து பேசுகையில், இந்த வரிவிதிப்பால் அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து வாங்கும் பொருட்களின் அளவை குறைப்பார்கள் என்றும், இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வருடத்திற்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பின்னலாடைகள் திருப்பூரிலிருந்து உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அதில் 22 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் அமெரிக்க சந்தையை மட்டுமே சார்ந்துள்ளது. எனவே, இந்த வரிவிதிப்பு திருப்பூருக்கு ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த இழப்புகளை ஈடுசெய்ய ஐரோப்பிய சந்தை போன்ற பிற மாற்று வழிகளை அணுகுவது குறித்து பல நிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாகவும், இது ஒரு வகையில் இந்தியாவுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்றும் குமார் துரைச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.