பாதுகாப்பா இருக்கீங்களா? நல்லா படிக்கிறீங்களா? – திடீரென காரிலிருந்து இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (12:13 IST)
தர்மபுரி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழியில் காரிலிருந்து இறங்கி மாணவிகளை நலம் விசாரித்துள்ளார்.

தர்மபுரியில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தமிழக முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின் முதல்வர் தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் புறப்பட்டார்.

அப்போது செல்லும் வழியில் அங்குள்ள பள்ளி ஒன்றில் காரை நிறுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு மாணவிகள் அவருக்கு வரவேற்பு அளித்த நிலையில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் பள்ளி செயல்பாடுகள், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்