நவராத்திரிக்கு தயாராகும் மக்கள்! கொலு பொம்மை விற்பனை அமோகம்!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:12 IST)
நாடு முழுவதும் நவநாத்திரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்து வருகிறது.

நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில் கொலு பொம்மைகள் அமைத்து 9 நாட்களும் பாடல்கள் பாடி கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 7ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கொலுபொம்மை விற்பனை ஆரம்பித்துள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணா மூர்த்தி, அன்னபூரணி, சிவன் குடும்பம், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி உள்ளிட்ட பல்வேறு கடவுள் சிலைகள் அதிகமாக விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தாத்தா, பாட்டி பொம்மைகள், விலங்குகள் பொம்மைகள், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொம்மையும் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்