நடந்து முடிந்த புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.இதில் மெஜாரிட்டி என்.ஆர்.காங்கிரஸ் என்பதால் அக்கட்சியினர் ஒருமனதாக என்.ரங்கசாமியை முதல்வராக தேர்வு செய்தனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னதாக அவர் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆனால் பதவியேற்றவுடனேயே அவருக்கு உடல்நலம் குன்றியது.