பதிலே சொல்ல மாட்டார்; மணிக்கணக்கா பேசுவார்!? – பிரதமர் மோடியை விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (09:44 IST)
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றன. சமீபமாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிபிசியின் ஆவணப்படம், அதானி பங்குசந்தை பிரச்சினை உள்ளிட்டவை குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப முயன்றன.

தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டபோதும் அதுகுறித்து பிரதமர் மோடி சரியான விளக்கத்தை அளிக்கவில்லை என எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பிரதமர் நாடாளுமன்ற கூட்டத்தில் ராகுல்காந்தி குடும்பத்தினர் “காந்தி” என்ற பெயரை பின்னாள் சேர்த்துக் கொள்வது குறித்து பேசியது சர்ச்சையானது.

பிரதமரின் நாடாளுமன்ற உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல் மணிக்கணக்காக பேசுவது எப்படி என்பதை பிரதமர் மோடியின் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன். வார்த்தை ஜாலங்கள்தான் பிரதமர் உரையில் இருந்தது. பிபிசி ஆவணப்படம், அதானி விவகாரம் குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு சொல்ல அவரிடம் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்