தமிழக தலைநகர் சென்னை தொழில் உற்பத்தி மையமாக இருப்பதாலும், மாநில எல்லையாக இருப்பதாலும், உள் மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வேலை, வணிகம் சார்ந்து சென்னையில் இயங்கி வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் சென்னையின் வாடகை வீடுகளையே நம்பி உள்ளனர்.
இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையம் சங்கர் ஜிவால் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய உத்தரவை விடுத்துள்ளார். அதன்படி வாடகைக்கு வீடு விடும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டு விவரத்துடன், அதில் தங்கியுள்ளவர்கள் விவரங்களையும் அக்டோபர் 26ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.