தயாரிப்பாளர், எஸ். ராதா கிருஷ்ணாவுக்கு சொந்தமான ஹரிஸ்கா & ஹாசன் கிரியேசன்ஸ் நிறுவனத்திலும், நடிகர் நானி வால்போஸ்டர் நினிமா கம்பெனியிலும், நடிகர் மகேஷ் பாபுவுக்கு சொந்தமான ஜி.மகேஷ் பாபு எண்டர்டெயின்மெண்ட் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில்,தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த ராணாவின் தந்தை, சுரேஷ்பாபு, ஆன்லைமில் படங்கள் வெளியாவதால் தொடர்ந்து நிறுவனம் நஷ்டம் அடைந்து வருவதாகவும், மின்சார கட்டணம் கூட கட்டவில்லை என தெரிவித்திருந்தார்.
அப்போது, அவர் கணக்குக் காட்டியிருக்கும் தொகைக்கும், அவர் பேட்டி கொடுக்கும்போது கூறிய தொகைக்கும் இடையே வேறுபாடு இருந்ததால் அவரது அலுவலகத்தில் சோதனை நடந்ததாக தகவல்கள் வெளியாகிறது.