ஊராட்சிக்கு அளிக்க வேண்டிய நிதியை டெண்டர் விடுவது நியாயமா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்

வெள்ளி, 10 ஜூலை 2020 (09:30 IST)
குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு டெண்டர் முறையை அமல்படுத்துவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் மூலம் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஊராட்சிகள் வாரியாக டெண்டர்கள் விடுவதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்காமல் டெண்டர் முறையை பின்பற்றுவது உள்ளாட்சி அமைப்புகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகும். இந்த திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலர்கள் ஒத்துப்போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியை மாவட்ட வாரியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்து அளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்