ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:38 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வார இறுதியான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 23 அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த வார ஊரடங்கில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளே இந்த ஊரடங்கிலும் பின்பற்றப்படுகின்றன.