வணிக வரி அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (11:15 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் டெல்டா மற்றும்ஒமிக்ரான் பாதிப்புகள் வேகமாக பரவி வருகின்றன. தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானதால் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் காணொலி கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்துக்கொள்ளவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்