தமிழகம் முதலிடம்: ஜெயகுமார், தமிழகம் இரண்டாமிடம்: முக ஸ்டாலின்

வியாழன், 26 டிசம்பர் 2019 (21:36 IST)
தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமாரும், இல்லை தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் மாறி மாறி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, ‘மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருப்பதாக கூறினார். நாட்டிலேயே நிர்வாகத்திறனில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்றும், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த புத்தாண்டிற்கு பரிசு என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது அதிமுக ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக உள்ளது என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
தமிழகம் சிறப்பான இடத்தில் இருப்பதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பற்ற பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக மு க ஸ்டாலினும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்