எளிய மக்களின் உரிமைகளுக்காக தன்வாழ்வை அர்ப்பணித்தவர் ’நல்லகண்ணு’ - பன்னீர் செல்வம் !

வியாழன், 26 டிசம்பர் 2019 (15:14 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழக துணைமுதலவர் ஓ. பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 95 வது பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார். 
அதில்,’’ நேர்மை எளிமையை தனது அடையாளங்களாக கொண்டு எளியமக்களின் உரிமைகளுக்காக தன்வாழ்வை அர்ப்பணித்து வரும் விடுதலை போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான #நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் ’’என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்