கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: அழகிரி ஓப்பன் டாக்!

ஞாயிறு, 19 நவம்பர் 2017 (12:00 IST)
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கலைஞர் அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார்.


 
 
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். மேலும் திமுகவின் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும் இருந்தார். தனக்கென கட்சியில் தனி செல்வாக்குடன் வலம் வந்த மு.க.அழகிரி தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினுடன் மல்லுக்கட்டியதில் கருணாநிதியின் கோவத்துக்கு ஆளானார்.
 
ஸ்டாலின் குறித்து ஊடகங்களில் பேசியதால் கட்சியில் இருந்து தற்காலிகமாக கருணாநிதியால் நீக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து அவர் ஸ்டாலின் குறித்தும் தலைவர் பதவி குறித்தும் பேசியதால் நிரந்தரமாக திமுகவில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்டார். அதன் பின்னர் சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை சரியாக இருக்கிறது. அவரைச் சந்தித்து விட்டுத்தான் வருகிறேன். அவர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபட தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்