கருணாநிதி போலவே தமிழக அரசியலும் அமைதியாகிப் போனது - மு.க.அழகிரி குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (12:35 IST)
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து திமுக தலைவரின் மகன் மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
திமுக-வில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கி விட்டதால், அரசியல் மற்றும் திமுகவை விட்டு அழகிரி சற்று தள்ளியே இருக்கிறார். கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டசபையில் அவர் அடியெடுத்து வைத்த நாளை வைரவிழா கொண்டாட்டம் என்கிற பெயரில் திமுக கொண்டாடியது. அதில் கூட அழகிரி பங்கேற்கவில்லை. ஆனால், திமுக சார்பில் நடைபெறும் முரசொலி பவளவிழாவில் கலந்து கொள்வேன் என அவர் கூறியுள்ளார். 
 
இந்நிலையில், சமீபத்தில் வேதாரண்யத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த போது “கருணாநிதியின் மௌனத்திற்கு பிறகு தமிழகத்தில் அரசியலே மௌனமாகிவிட்டது” எனக் கூறினார்.
 
நீட் விவகாரம், குட்கா விவகாரம், ஊழல் என அனைத்து பிரச்சனைகளிலும், தமிழக அரசுகு எதிராக, எதிர்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் இப்படி கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்