பொன்முடி வீட்டில் மு.க.அழகிரி, முக தமிழரசு.. திடீர் சந்திப்புக்கு என்ன காரணம்?

சனி, 23 டிசம்பர் 2023 (12:48 IST)
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சமீபத்தில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது என்பதும் இதனை அடுத்து மேல்முறையீடு செய்ய வசதிக்காக அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்ற செய்தியை பார்த்தோம்.
 
 இந்த நிலையில் தீர்ப்புக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் பொன்முடி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனாலும் இருவரும் என்ன பேசிக் கொண்டனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 
 
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக முதல்வரின் சகோதரருமான முக அழகிரி திடீரென பொன்முடி வீட்டில் அவரை சந்தித்துள்ளார்.  இந்த சந்திப்பின்போது முக தமிழரசுவும் இருந்துள்ளார்,
 
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. முக அழகிரி, முக தமிழரசு ஆகியோர் பொன்முடியை சந்தித்து விட்டு பேசிய தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்