தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்கள் கழித்து புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு!

ஞாயிறு, 27 ஜூன் 2021 (16:09 IST)
தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்கள் கழித்து புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு!
தேர்தல் முடிவடைந்து சுமார் 50 நாட்கள் கழித்து புதுச்சேரியில் அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர் 
 
புதுவையில் தமிழகத்தில் போலவே மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் இரு கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்தனர்
 
இந்த நிலையில் புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப்பட்டு 50 நாட்கள் கடந்த நிலையில் அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றனர். என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக வை சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் 
 
கடவுளின் பெயரால் உறுதி கூறுவதாவது என்றும், இந்திய அரசின் புதுச்சேரி ஆட்சி அமைப்பின் அமைச்சர் என்ற வகையில் உண்மையாக கடமையாற்றுவேன் என்ற உறுதி மொழியுடன் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்