நேற்று கள்ளக்குறிச்சி அருகே விஷச்சாராய குடித்த ஐந்து பேர் பலியானதாக முதல் கட்ட செய்தி வெளியான நிலையில் அதன் பின் படிப்படியாக உயிர்ப்பலி அதிகரித்து தற்போது 30 பேர் வரை உயிர் இழந்திருப்பதாகவும் இன்னும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய தொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, அன்புமணி, விஜய் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுக அரசும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.