தொடர்ந்து மயக்க நிலையில் இருக்கும் செந்தில் பாலாஜி: மருத்துவமனை தரப்பில் தகவல்

புதன், 14 ஜூன் 2023 (08:03 IST)
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 
நேற்று நள்ளிரவு திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நெஞ்சுவலி, மயக்கம் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை பன்நோக்கு மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டார். 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியான தகவலின் படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இதயத்துடிப்பு ஆக்ஸிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அமைச்ச செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் தொடர்ந்து மயக்க நிலையில் தான் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்