தமிழகத்தில் தை முதல் நாள் பொங்கள் பண்டிகை தொடங்கி 3 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஜனவரியில் 14 முதல் 16 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் பொங்கல் நாளில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் “நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்த உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி 14ம் தேதி தொடங்கி 16 வரை 3 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.