சினிமா வேறு அரசியல் வேறு: விஜய் விமர்சனம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

Mahendran

சனி, 7 டிசம்பர் 2024 (15:11 IST)
சினிமா வேறு, அரசியல் வேறு என்று விஜய் விமர்சனத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.
 
"சினிமாவில் கால் வைப்பது என்பது வேறு, அரசியலில் கால் வைப்பது என்பது வேறு. பிளஸ் மைனஸ் ஆவது சினிமாவில் நடக்கும், ஆனால் அரசியலில் நடக்கவே நடக்காது. 
 
2026ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கப் போவது திமுக தான். எனவே தான் எங்களை நோக்கி பாய்கிறார்கள்," என்று அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
மேலும், "உதயநிதி உழைப்பால்தான்அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்தது. யார் தலைவராக வரவேண்டும் என்பதை தொண்டர்களே முடிவு செய்கிறார்கள்," என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
நேற்று அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய், திமுகவை சரமாரியாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, குடும்ப ஆட்சி, மன்னர் ஆட்சி, மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி," என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்