7 உலக அதிசயங்களை விட சிறப்பானது தஞ்சை பெரிய கோவில்: மத்திய அமைச்சர்

திங்கள், 27 செப்டம்பர் 2021 (09:27 IST)
உலகில் உள்ள ஏழு உலக அதிசயங்களை விட தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் அதிக சிறப்புகளை கொண்டது என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் அவர்கள் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு சிறப்பு அனுமதி பெற்று வந்தார். அங்கு அவர் வராஹியம்மன், பெருவுடையார் அவர்களை தரிசனம் செய்து வழிபட்டார் 
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகளை அடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை என்றும் உலகில் உள்ள ஏழு அதிசயங்களை விட அதிக சிறப்பு வாய்ந்தது தஞ்சை பெரிய கோயில் என்றும் தெரிவித்துள்ளார் 
 
தஞ்சை பெரிய கோவிலுக்கு உரிய மரியாதை உலக அளவில் இன்னும் கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில் மத்திய அமைச்சரின் இந்த கூற்று அவர் பெரும் ஆறுதலை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்