செவிலியரின் அலட்சியத்தால் குழந்தையின் கட்டைவிரலில் வெட்டு! தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

புதன், 9 ஜூன் 2021 (07:43 IST)
தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தையின் கையில் இருந்த வென்ப்ளானை எடுக்கும் போது தவறுதலாக கட்டை விரலை வெட்டியுள்ளார் செவிலியர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி மற்றும் கணேசன் தம்பதிகளின் பிறந்த குழந்தை உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ் மட்டுமே ஊசி மூலமாக செலுத்தப்பட்டு வந்துள்ளது. அதற்காக குழந்தையின் கையில் வென்ப்ளான் போடப்பட்டு இருந்துள்ளது.

குழந்தையின் உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் அறிவிக்கப்பட்ட நிலையில் கையில் இருந்த வென்ஃப்ளானை செவிலியர் கத்தரிக்கோலால் நறுக்கியுள்ளார். அப்போது தவறுதலாக குழந்தையின் கட்டைவிரலையும் நறுக்க விரலின் பெரும்பகுதி வெட்டப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் அழுது புலம்பியுள்ளனர். பின்னர் குழந்தையின் விரல் சேர்த்து வைத்து தையல் போடப்பட்டுள்ளது. விரல் சேருமா இல்லையா என்பது இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியவரும் என சொல்லப்படுகிறது. சம்மந்தப்பட்ட செவிலியர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்