அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்க துறையினர் சோதனை செய்த நிலையில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் விசாரணைக்கு பின்னர் பொன்முடி கைது இல்லை என்று அறிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
ஆனால் அதே நேரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இன்று மாலை பொன்முடி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இருவரும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய விசாரணைக்கு பின்னர் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.