இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசிய போது, “நாங்கள் வெள்ள நிவாரண பணியை ஆய்வு செய்ய சென்றபோது எங்கள் பின்னால் இருந்து யாரோ சேற்றை வீசியிருக்கிறார்கள். முன்னால் நின்று சேற்றை வாரி இறைக்க, நமது ஆட்கள் அதை விடுவார்களா? அந்த சம்பவத்துக்கு பிறகும் கூட நான் பல்வேறு இடங்களுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்தேன்.
எனது பணியில் எந்தவித தடையும் இல்லை. அரசியல் நோக்கத்திற்காக சிலர் இவ்வாறு செய்வதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. இதை அரசியல் ஆக்க விரும்பவில்லை. வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதுதான் எங்கள் நோக்கமே. இதை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எங்களுக்கு கிடையாது,” என்று அவர் தெரிவித்தார்.