ராஜவாய்க்கால் பாலம் கட்டுமானப்பணிகளை அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

புதன், 8 ஜூலை 2020 (22:23 IST)
கரூரில் அம்மாசாலை மற்றும் வெங்கமேடு ராஜவாய்க்கால் பாலம் கட்டுமானப்பணிகளை அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் ரயில்நிலையம் முதல் சேலம் பைபாஸ் சாலை வரை சுமார் 2.6 கி.மீட்டர் தூரத்தினை இணைக்கும் இந்த அம்மாசாலை பணிகளையும் ரூ 21.12 கோடி மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் இந்த அம்மாசாலை பணிகளையும், கரூர் டூ வெங்கமேடு சாலையினை இணைக்கும் ராஜவாய்க்கால் பாலப்பணிகளையும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாக  ஆய்வு மேற்கொண்டார்.

முதலில் உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் இந்த அம்மா சாலை பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்றும், வெங்கமேடு ராஜவாய்க்கால் பால பணிகளானது பாதாள சாக்கடை கால்வாய் கீழே செல்வதால் தான் இந்த கால தாமதம் என்றும், மேலும் மழைநீரும் தேங்கி நிற்பதால் காலதமதமாகி வருவதோடு, தற்போது கம்பிகள் அமைக்கும் பணியினை தொடர்ந்து கான்கிரீட் போடும் பணியும் விரைவில் நடைபெற உள்ளதாகவும், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த கரூர் டூ வெங்கமேடு ராஜ வாய்க்கால் பாலப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் வட்டாட்சியர் அமுதா, கரூர் வடக்கு நகர் அ.தி.மு.க செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்