நீட் தேவையற்றது! 705 மதிப்பெண் பெற்ற மாணவி குறித்து தமிழக அமைச்சர்..

Mahendran
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (15:38 IST)
நீட் தேவையற்றது! நீட் தேர்வு முறைகேடுகளை மூடிமறைக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ், நீட் தேர்வில் வெற்றி பெற்று பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த குஜராத் மாணவி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
 
குஜராத்தில் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற மாணவி,12-ம் வகுப்பு இயற்பியல், வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார்.
 
12-ம் வகுப்பு இயற்பியல், வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை எனில் இயற்பியல், வேதியியல் பாடங்களை கொண்ட நீட் தேர்வில் மட்டும் எப்படி தேர்ச்சி பெற முடியும்?
 
உயிர் காக்கும் பணியான மருத்துவ பணிக்கு தகுதியானவர்கள் தான் வரவேண்டும் ஆனால் இந்த தகுதியை நிர்ணயம் செய்யும் தகுதித் தேர்வுகள் தகுதியாக நடத்தப்படுகிறதா என்றால் இல்லை.இதற்கு ஒரே தீர்வு அந்தந்த மாநில அரசுகள் அவரவர் மாநிலங்களில் உள்ள கல்விக் கொள்கைக்கு ஏற்ப மருத்துவ சேர்க்கை நடத்துவதே. 
 
இல்லையெனில் சமூக நீதிக்கும், மாநில சுயாட்சிக்கும், ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கும் எதிரான இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர்கல்வி படிப்பிற்கு +2 தகுதித் தேர்வே போதுமானது!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்