நீங்க ஆட்சியில் இருந்தப்போ ஆக்ஸிஜன் இருப்பு என்ன! – எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

வெள்ளி, 28 மே 2021 (12:55 IST)
தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகரித்திருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களிலும் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாகவும், ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் ஆக்ஸிஜன் இருப்பு 230 மெட்ரிக் டன். தற்போது ஒருநாள் ஆக்ஸிஜன் கையிருப்பு 650 மெட்ரிக் டன்னாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்