மிக்ஜாம் புயலால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு இருக்குமா?அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்

சனி, 2 டிசம்பர் 2023 (12:52 IST)
’மிக்ஜாம்’ புயல் ஆந்திராவில் கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது என சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கூறியபோது, ‘புயல் முன்னெச்சரிக்கையாக வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் 4,000 முகாம்கள் தயர்நிலையில் இருப்பதாகவும் குறிப்பாக சென்னையில் 162 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்,.

மேலும் மழையினால் ஏற்படும் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் எனவும், கால்நடை இழப்புக்கு அதிகபட்சமாக ரூ.30,000 வழங்கப்படும் எனவும், குடிசை வீடுகளுக்கு ரூ.5,000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Edited by Mahendran


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்