அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: அமைச்சர் துரைமுருகன்

செவ்வாய், 9 மே 2023 (16:30 IST)
அமைச்சரவை மாற்றம் குறித்து உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியுமோ அந்த அளவுக்கு தான் எனக்கும் தெரியும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
சென்னை கோட்டூர் புறத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் மாளிகைக்கு சென்றால் சொல்லிவிட்டு தான் செல்வேன் என்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் அமைச்சரவை மாற்றங்களை பற்றி யாமாறியேன் பராபரமே என்று தெரிவித்தார். 
 
மேலும் புதிய அமைச்சர்களை நியமிக்கவும் ஏற்கனவே இருக்கும் அமைச்சரை நீக்கவும் முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆனால் அது நடக்குமா என்பது உங்களுக்கு தெரிந்த அளவு தான் எனக்கும் தெரியும் என்றும் அமைச்சரவை மாற்றத்திற்கான தேவை இருக்கிறதா என முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். 
 
மேலும் நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வேன் என்றும் துணை முதல் அமைச்சராக பொறுப்பு கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்