இந்த நிலையில் ஆளுநர் ரவியை சந்திக்க சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனுக்கு அமைச்சர் துரைமுருகன் இன்று செல்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் ஆளுநர் மாளிகை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சிலர் இலாக்கா மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் ஒரு சிலர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் சில அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.