முறைப்படி கூப்பிட்டும் எடப்பாடியார் பங்கேற்கவில்லை! – துரைமுருகன் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (12:45 IST)
நேற்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுகவினர் பங்கேற்காதது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற நிலையில் எதிர்கட்சியான அதிமுக பங்கேற்கவில்லை.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் துரைமுருகன் “ஜெயலலிதா உருவ பட திறப்பின்போது எங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்காததால் நாங்கள் செல்லவில்லை. ஆனால் கருணாநிதி பட திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வேண்டும் என நானே நேரடியாக அவருக்கு போன் செய்து அழைப்பு விடுத்தேன். எனினும் அதிமுகவினர் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்