அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்! மருத்துவமனை அறிக்கை என்ன சொல்கிறது?

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (19:08 IST)
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நிலை கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் இன்றைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில் அமைச்சரின் உடலில் உள்ள முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லை என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை குறித்து ஆலோசனை செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்