முதலில் எச்சரிக்க வேண்டும், பின் வானை நோக்கி சுட வேண்டும், அதன்பின் முட்டிக்காலுக்கு கீழேதான் சுட வேண்டும். அப்படி இருக்கும் போது மக்களின் தலையில், நெஞ்சில் ஏன் போலீசார் சுட்டனர். அதுவும், தீவிரவாதிகளை சுடுவதற்கும், என்கவுண்டர் சமயங்களிலும் பயன்படுத்த வேண்டிய ஸ்னைப்பர் துப்பாக்கியை பயன்படுத்தியது தவறு என்கிற கருத்தும் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழக போலீசாரின் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, காஷ்மீர் பகுதிகளில் எல்லையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பல ராணுவ வீரர்கள் கோபமாக பேசும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உங்களுக்கு யார் நெஞ்சில் சுட அனுமதி கொடுத்தது? ஸ்னைப்பர் துப்பாக்கி எதற்கு பயன்படுத்த வேண்டும் என உங்களுக்கு தெரியுமா? அதற்கு உங்களுக்கு போதிய பயிற்சி இருக்கிறதா?. உங்களுக்கு அங்கு எல்லா வசதியும் இருக்கிறது. இங்கே வந்து பாருங்கள். காஷ்மீரில் நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று. மக்களுக்காகத்தானே நாங்கள் இங்கே இருக்கிறோம். நீங்கள் ஏன் அவர்களை கொலை செய்கிறீர்கள். உங்களை சொல்லி தவறில்லை. தமிழகத்தில் அரசாங்கம் சரியில்லை என அவர்கள் அந்த வீடியோவில் எழுச்சியுடன் பேசியுள்ளனர்.