சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு சொந்தமானது. புதிய நீதிக்கட்சியின் தலைவராக உள்ள ஏ.சி.சண்முகம் தனது பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரையுலக பிரமுகர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி வருவது வழக்கம்
கடந்த 1973ஆம் ஆண்டு 'பொண்ணுக்கு தங்க மனசு' என்ற படத்தில் சிவகுமாரின் நண்பராக அறிமுகம் ஆன விஜயகுமார் சமீபத்தில் வெளியான 'குற்றம் 23' படம் வரை நூற்றுக்கணக்கான படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் செய்து வரும் கலையுலக சேவையை பாராட்டி இந்த டாக்டர் பட்டம் தற்போது வழங்கப்படவுள்ளது.