எதுக்கு இந்த வெட்டி பந்தா..? அதிமுக - அமமுக மோதல்: தீவிர விஸ்வாசிகளின் குரல்..

சனி, 27 ஏப்ரல் 2019 (12:00 IST)
அதிமுக - அமமுக என அம்மா பெயரில் செயல்ப்பட்டு வரும் இரு கட்சிகள் இப்படி தேவையில்லாமல் மோதிக்கொள்வதை விட இணைந்து செயல்படுவதே சிறந்தது என இரு கட்சிளின் தீவிர விஸ்வாசிகளின் குரல் ஓங்கியுள்ளது. 
 
கடந்த 2 நாட்களாக அதிமுக - அமமுக தரப்பில் நடந்து வரும் முட்டல் மோதல்தான் இந்த குரலுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது. சபாநாயகர் தனபாலிடம் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் கொடுத்த மனுவின்படி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
இந்த திடீர் நடவடிக்கை ஏன் என தெரியவில்லை. ஒருவேளை அமமுகவை கட்சியாக ஆணையத்தில் பதிவு செய்து அங்கீகாரம் கிடைக்க தின்கரன் எடுத்த முடிவுகளின் காரணமாக அதிமுக தரப்பில் இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதா என சந்தேகிக்க தோன்றுகிறது. 
இது இப்படி இருக்க அதிமுக தீவிர விஸ்வாசிகள், இரண்டு தரப்பும் முட்டி மோதிகொள்வதை விரும்பவே இல்லை. எதுக்கு மோதிக்கொண்டு திமுகவிற்கு பலம் சேர்க்க வேண்டும். பேசாமல், இதை எல்லாம் விட்டுவிட்டு இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தலாம் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது. 
 
இப்போதைக்கு இந்த 3 பேர் தகுதி நீக்க நடவடிக்கை எல்லாம் தேவையா? ஒன்று சேர்ந்து சிறப்பான ஆட்சியை கொடுப்பதை விட்டுவிட்டு தேவையில்லாமல் மோதிக்கொள்கிறார்கள் என பேசி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்