மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை!

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (14:00 IST)
மேட்டூர் அணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வறண்டுபோய் தண்ணீர் இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறந்து வைத்தார். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒருமுறை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. ஒரே ஆண்டில் இரண்டுமுறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது அனேகமாக இப்போதுதான் முதல்முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கலில் குவிந்தனர். ஆனால் வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்