தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

திங்கள், 1 நவம்பர் 2021 (13:22 IST)
தீபாவளியையொட்டி மக்கள் வெளியூர் செல்லும் நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னை மெட்ரோ ரயில் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்