விநாயகர் சதுர்த்தி விடுமுறை எதிரொலி: மெட்ரோ ரயில்களின் நேரம் மாற்றம்..!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (17:45 IST)
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதியை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  நாளை முதல் சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனை அடுத்து நாளை இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை 9 நிமிட இடைவேளைக்கு பதிலாக ஆறு நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
மெட்ரோ ரயில்கள் இரவு 10 மணி வரை நெரிசல் மிக்க நேரங்களாக கருதப்படுவதால் அதற்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்