கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில்.. 43 கி.மீ. தூர சேவையில் ஆய்வறிக்கை..!

திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:29 IST)
சென்னை கோயம்பேடு மற்றும் ஆவடி இடையே 43 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்க ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தற்போது விமான நிலையம் வரை முதல்  விம்கோ நகர் வரையிலும் விமான நிலையம் முதல் கோயம்பேடு வரையிலும் மெட்ரோ சேவை நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது கோயம்பேடு - ஆவடி இடையே 43 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை நீடிக்க சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆய்வறிக்கை தமிழ்நாடு அரசிடம் விரைவில் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை ஆய்வு செய்து அதன் பின் மெட்ரோ ரயில் இயக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கினால் மிகப்பெரிய அளவில் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்