ஆலயம் காப்போம் என்ற அறக்கட்டளையின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராயப்பேட்டை ஒயிட் சாலையில் உள்ள இரண்டு கோயில்களை இடிக்கும் திட்டம் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு இருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் மெட்ரோ ரயில் தரப்பில் கோயில்களை இடிக்கும் திட்டம் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தில் ராஜகோபுரத்தை நகர்த்தும் திட்டம் இருப்பதாகவும் மெட்ரோ ரயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது