இதனையடுத்து வெப்பநிலை குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய 12 மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். எனவும் வெப்பநிலை 98.6 டிகிர் செல்சியஸ் வரை செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இன்னும் பீதியடைந்துள்ளனர்.