வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – கனமழை எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (14:04 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்கள் முன்பாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக உருவாகி மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்