திமுகவிடம் ஒப்படைக்கப்படும் தமிழக அரசு: சுப்பிரமணியன் சுவாமி டுவீட்டால் பரபரப்பு!

செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (16:50 IST)
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த பரபரப்பு தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இன்று சென்னை வந்துள்ளார்.


 
 
பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாமல் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு எதிராக உள்ள எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் மூலம் தகுதி நீக்கம் செய்துள்ளார். ஆனால் அது சட்டப்படி செல்லாது என கூறப்படுகிறது. வரும் 20-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்ற அறிவிப்பு வர உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழக அரசை கவிழ்க்க பலவாறு திட்டங்கள் தீட்டப்படுவதாகவும், அடுத்த ஆட்சி திமுக தான் தமிழகத்தில் அமைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த உச்சக்கட்ட அரசியல் சூழலில் பாஜக மூத்த தலைவரும் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து கூறுபவருமான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 
அதில் தமிழகத்தில் குழப்பம். திமுக, காங்கிரஸிடம் தமிழக அரசு தட்டில் வைத்து ஒப்படைக்கப்பட உள்ளது. மைலாப்பூரில் உள்ள அறிவு ஜீவியும் அவரது கூட்டாளியுமான தேர்வு செய்யப்படாத ஒருவரும் தங்கள் தவறுகளுக்கு பரிகாரம் செய்துகொள்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதில் அவர் மயிலாப்பூர் அறிவு ஜீவி மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத அவரது கூட்டாளி என குறிப்பிடுவது குருமூர்த்தி மற்றும் அருண் ஜெட்லி என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்