பாஜக - சிவசேனா பிரிவு? மத்தியில் வெடிக்க போகும் அடுத்த சர்ச்சை!!
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (16:17 IST)
மத்திய அரசவையிலும், மகாராஷ்டிராவிலும் பாஜக தலைமையிலான அரசியல் ஆட்சியில் சிவசேனா ஒரு தனி அங்கம் வகிக்கிறது.
ஆனால் பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளை சிவசேனா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் விரைவில் இந்த இரு கட்சிகளும் பிரிந்து மத்திய அரசியலில் ஒரு பரபரப்பு ஏற்படும் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்கவும் பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு நாங்கள் (சிவசேனா) பொறுப்பில்லை. இந்த குற்றச்சாட்டை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. அரசுக்கான ஆதரவை தொடர்வதா அல்லது விலக்கி கொள்வதா என விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.