1.50 கோடி பேர் இலக்கு – மெகா தடுப்பூசி முகாம் தேதி அறிவிப்பு!

புதன், 17 ஆகஸ்ட் 2022 (10:27 IST)
34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடக்கிறது.


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி மீண்டும் குறைந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் முகக்கவசம் கட்டாயமாக்கபட்டுள்ள நிலையில், மீண்டும் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. இந்நிலையில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடக்கிறது.

சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போடாத 1.50 கோடி பேருக்கு இந்த சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்