இந்தியாவில் கடந்த 2019 இறுதி வாக்கில் கொரோனா பரவ தொடங்கிய நிலையில் தற்போது வரை பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது பண்டிகை காலங்கள் தொடங்குவதால் பல்வேறு மாநிலங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேசமயம் டெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமிக்ரானை தொடர்ந்து புதிய மாறுதலடைந்த வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, மராட்டிய, ஒடிசா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை வரவிருக்கிற பண்டிகைக் காலங்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்கவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.